உள்ளூர் சந்தையில் தங்கம் ஒரு பவுணின் விலை 5 ஆயிரம் ரூபாவுக்கு மேல் அதிகரித்துள்ளது.
செட்டியார் தெருவில் நேற்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 112,500 ரூபாவுக்கும், 24 காரட் தங்கப் பவுண் ஒன்று 121,500 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இலங்கையில் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் 22 காரட் தங்கப் பவுண் 107,800 ரூபாவாகவும் 24 காரட் தங்கப் பவுண் 116,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந் நிலையில் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டமை அடுத்து இவ்வாறு இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலக தங்கச் சந்தைகளின் ஞாயிறன்னு ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,818 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.