விவசாயிகளுக்கு பெரும்போகத்திற்கு தேவையான உரங்களைப் பெற்றுக் கொடுக்க அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, பொட்டாசியம் உள்ளிட்ட உரங்கள் தற்போது கிடைக்கப் பெற்று வருவதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், நைட்ரஜன் உரங்களை இறக்குமதி செய்வதற்கு, தற்போது புதிய மாதிரிப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும், தற்போதைய நிலையில் திரவ உயிர் உரங்கள் ஊடாக, நைட்ரஜன் உரத்தின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள தற்காலிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இதேவேளை, விவசாயிகளுக்கு, பெரும்போகத்திற்கு தேவையான உரத்தைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை, எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாயத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தார்.
இதன்படி, இதன் முதற்கட்ட நடவடிக்கை அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.