எனினும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இன்று ஜனாதிபதியுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விரைவில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.
கொவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்த பல முன்மொழிகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சுகாதார அதிகாரிகள் சமர்ப்பித்த முன்மொழிவுகளை பரிசீலித்த பின்னரே முடிவுகள் எடுக்கப்பட்டன என அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பிலான புதிய கட்டுப்பாடுகள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவினால் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.