
மட்டக்களப்பு தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழகத்தின் 06 ஆவது தாழங்குடா பிறீமியர் லீக் (TPL) கிறிக்கட் சுற்றுப்போட்டியானது இன்று 2021.03.13 காலை கழகத் தலைவர் திரு நிரஞ்சன் தலைமையில் சிறப்பாக ஆரம்பமானது.
ஸீப்ரா விளையாட்டுக் கழகத்தினை சேர்ந்த வீரர்கள் அனைவரும் இந்த மென்பந்து சுற்றுப் போட்டியில் கெனடி, தாழங்குடா வாரியர்ஸ், இலெவன் கிங்ஸ், ஸீப்ரா லயன்ஸ், கிறீன் நைற்ஸ் என 05 அணிகளாகப் பிரிந்து போட்டியிடுகின்றனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் தாழங்குடா பிறீமியர் லீக் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நாளை ஞாயிறு மாலை இடம்பெறவுள்ளது.
இப் போட்டிகளில் வெற்றியீட்டும் அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் பணப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.


























