மன்னார்,முல்லைத்தீவு பொலிஸாரால் அரியநேத்திரன் விசாரணை!

 

(லக்‌ஷன்)

பொத்திவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் பெயரில் (11.03.2021) இன்று கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் விசாரனை மேற்கொள்ளப்பட்டது.

 மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பொலிகண்டி பிரதேச பொலிஸாரினால் கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு கொடுத்த தகவலுக்கு அமைவாக வாக்கு மூல பதிவு எடுக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். 

 மேலும் தெரிவிக்கையில் குறித்த விசாரணையில் உங்களை இந்த போராட்டத்தில் யார் கலந்துகொள்ள அழைத்தது எனவும் எந்த வாகனத்தில் சென்ற நீங்கள் அந்த வாகனம் உங்களுடைய சொந்த வாகனமா என விசாரித்த போது நான் கூறியது என்னுடைய வாகனத்தில் தான் பொத்திவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக இறுதி வரை பயணித்தேன் என கூறினேன். 

 அதே வேளை நீதிமன்ற கட்டளைகள் உங்களுக்கு கிடைத்தா என அவர்கள் கேட்டபோது நான் பொத்திவில் தொடக்கம் பொலிகண்டி வரை எந்த ஒரு நீதிமன்ற கட்டளைகளைகளும் எனக்கு கிடைக்கவில்லை என கூறினேன் என தெரிவித்தார்.