நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

 

மட்/மமே நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு செவ்வாய்க் கிழமை (23.02.2021) காலை பாடசாலை அதிபர் ஆர்.தியாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

50 மாணவ தலைவர்களுக்கான சின்னங்களை ஆசிரியர்கள் வழங்கி கௌரவித்ததுடன், மாணவ தலைவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து தமது கடமையை பொறுப்பேற்றனர்.

இந் நிகழ்வில் அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.