போரதீவுப்பற்றில் உள் நுழையும் வாகனங்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பகுதிக்கு உட்சென்ற வாகனங்கள் தொற்கு நீக்கம் செய்யப்பட்டதுடன் உள்செல்வோரும் மருத்துவ சோதனைகளுக்குட்படுத்தப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட 19 மாவட்டங்களுக்களில் ஊரடங்கு இன்று காலை முதல் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

போரதீவுப்பற்று பொதுச்சுகாதார பரிசோதகரின் வேன்டுதலுக்கு அமைவாக போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனியின் பணிப்புரைக்கு அமைவாக இன்று தொற்று நீக்கம் செய்யப்படுகின்றன.

கொரோனா நோயை தடுக்கும் முகமாகா
போரதீவுப்பற்று பிரதேச எல்லைக்குட்பட்ட  பட்டிருப்பு பாலத்தினுடாக வருகின்ற பஸ் வண்டி,மீன் வியாபாரிகள்,மரக்கறி வண்டிகள்,முற்சக்கர வண்டிகள் போன்றவற்றுக்கு தொற்று நீக்கம் செய்யப்பட்டு போரதீவுப்பற்று பிரதேசசபையினால் சுகாதார சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதேபோன்று போரதீப்பற்று பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்களான.கு.குபேரன் வு.ரிசிகோபன் ஆகியோரின் தலைமையில் பொதுமக்கள் வாகன சாரதிகள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு படுவான்கரை பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகளில் பிரதேசசபையின்  தவிசாளர்  செயலாளர் உத்தியோகஸ்தர்கள் அனைவரின் ஆலோசனைக்கு அமைய ஊழீயர்களினால் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.