மட்டக்களப்பில் மருத்துவ பீடத்தின் மதிலை உடைத்துச்சென்ற கார் –மயிரிழையில் உயிர் தப்பிய முன்னாள் பிரதியமைச்சர்

மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மதிலை உடைத்துக்கொண்டு கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த முன்னாள் பிரதி அமைச்சர் உட்பட இருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

கொழும்பில் இருந்து கல்முனைக்கு சென்றுகொண்டிருந்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மருத்துவபீடத்தின் மதிலை மோதிய உள்ளிருந்த கட்டிடத்திலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது காரில் பயணித்த முன்னாள் பிரதியமைச்சரும் அவரது மகளும் எந்தவித காயங்களும் இன்றி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

கொழும்பில் நடைபெற்ற கொரனா செயலணி கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் வாகனமே விபத்தில் சிக்கியுள்ளது.

இதன்போது கார் கடும் சேதமடைந்துள்ளதுடன் நித்திரை தூக்கம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.