நொச்சிமுனையில் வாழையில் ஏற்பட்ட அதிசயம்

மட்டக்களப்பு,நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வெட்டப்பட்ட வாழையொன்றில் வாழைக்குலையொன்று வெளிவந்த நிலையில் காணப்படும் அதிசயம் நிகழ்ந்துள்ளது.

நொச்சிமுனை அனுமார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் வெட்டப்பட்ட வாழையிலேயே குறித்த வாழைக்குலை மொத்தி வெளிவந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வெட்டப்பட்டிருந்த வாழை மரத்திலேயே இந்த வாழைக்குலைக்கான மொத்தி வெளிவந்துள்ளது.

இயற்கையான முறைகளுக்கு மாறாக குறித்த வாழைக்குலை வெளிவந்துள்ளமையானது அப்பகுதியில் பெரும் அதிசயமாக பார்க்கப்படுகின்றது.