மட்டக்களப்பு மாநகரசபையின் பிரஜைகள் சேவைகள் மையம் திறந்துவைப்பு

பொது மக்களுக்கான துரிதமானதும், வினைத்திறனானதுமான சேவைகளை நவீன தொழிநுட்பங்களின் உதவியுடன் வழங்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரஜைகள் சேவைகள் மையம் இன்று (23.09.2019) திறந்து வைக்கப்பட்டதுடன் மக்களின் பாவனைக்காக கையளிக்கபட்டது.

அவுஸ்திரேலிய வெளிவிவகார வாத்தக திணைக்களத்தின் நிதி பங்களிப்புடன் ஆசிய மன்றத்தின் உபதேசிய ஆளுகை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் பிரஜைகள் சேவை மையத்தினை ஆசிய மன்றத்தின் பணிப்பாளர் கலாநிதி கோபா குமார் தம்பி மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் ஆகியோரல் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநரக சபையின் நிர்வாக எல்லைக்குள் வதியும் மக்களுக்கான சேவைகளை துரிதமாகவும், தங்கு தடையற்ற முறையிலும் வழங்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள மேற்படி மையத்தின் ஊடாக பொதுமக்கள் ஒரே இடத்தில் மாநகர சபையின் அனைத்து விதமான சேவைகளையும் துரிதமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் நவீன தொழிநுட்பத்தின் உதவியுடன் மாநகர சபைக்கு வருகைதராது நேரடியாக வீட்டிலிருந்தவாறே இணையத்தளத்தின் ஊடாகவும் பதிவுகளை மேற்கொள்வதோடு, கட்டணங்களையும் செலுத்தக் கூடியதாக இருக்கும் எனவம் மாநகர முதல்வர் தெரிவித்தார்.

மேற்படி பிரஜைகள் சேவைகள் மையத்தின் திறப்பு விழாவில் சென்ற ஆண்டில் வருமான அறவீட்டு பணிகளில் தமது பங்களிப்;புகளைச் செய்த மாநகர சபையின் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதல்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஆணையாளர் க.சித்திரவேல், கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் நா.தனஞ்செயன் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.