கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் முதலமைச்சர் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா ஜனாதிபதியால் சற்றுமுன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குளுக்கு பின்னர் எழுந்த சர்ச்சைகளை தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ஹிஸ்புல்லா தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் வெற்றிடமாக இருந்த குறித்த பதவிக்கு இன்று ஷான் விஜயலால் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அவருக்கு நியமனக்கடிதத்தினை வழங்கியுள்ளார்.
ஷான் விஜயலால் டி சில்வா தென் மாகாண முதலமைச்சராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.