ஹிஸ்புல்லா தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

தமிழ் தேசிய கூட்டமைப்பு நிழல் அரசாங்கமாக செயற்படாமல் அரசாங்கத்துடன் இணைந்து பங்காளிகளாக மாறவேண்டும் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் தலைவர் க.பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லா தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்றினை பதிவுசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,கல்லடியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே கருத்து தெரிவித்தார்.
துமிழ் மக்களின்தேவைப்பாடுகள் தொடர்பில் கடந்த காலத்தில் பல தவறுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த தவறுகள் நிவர்த்திசெய்யப்படவேண்டுமானால் தற்போது ஏற்பட்டுள்ள 21 வெற்றிடங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிரப்பவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பொதுமக்களினால் கண்டறியப்பட்ட உண்மையின் அடிப்படையிலேயே ஆளுனர்கள் இராஜினாமா செய்யப்பட்டுள்ளனர்.ஏனைய அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளது என்பது கேலிக்கூத்தான ஒரு விடயம்.ஒற்றுமையினை நிரூபிக்கவேண்டும்,இனத்தின் அடையாளத்தினை உறுதிப்படுத்தவேண்டுமானால் இது தருனமல்ல.இந்த நாட்டினை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்பவர்களை ஊக்கப்படுத்தும் செயற்பாடாகவே கருதவேண்டியுள்ளது.இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விடயம்.
குடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு நாங்கள் பல துரோகங்களை செய்துள்ளோம்.தமிழ் மக்களின் தீர்வு,அபிவிருத்தி தேவைகள் தொடர்பில் பல தவறுகள் இடம்பெற்றுள்ளது.அது சரிசெய்யப்படவேண்டுமானால் தற்போது ஏற்பட்டுள்ள 21அமைச்சுகளின் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் நிழல் அரசாக இல்லாமல் பங்காளிக்கட்சியாக மாறவேண்டும்.அதன்மூலம் தமிழ் மக்களுக்கு தேவையானவற்றைப்பெற்றுக்கொடுக்கவேண்டும்.
ஐஎஸ்ஐஎஸ் தலைவர் சஹ்ரானுடன் கிழக்கு மாகாண முன்னாள்ஆளுனர் கைகுலுக்கும் வகையிலான புகைப்படங்கள் பலத்த சர்ச்சையினை நாட்டில் ஏற்படுத்தியிருந்தது.இது தொடர்பில் சரியானவற்றை தெளிவுபடுத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
ஆதன்காரணமாக எமதுகட்சியினால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கிழக்கு மாகாண ஆளுனருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றினை பதிவுசெய்துள்ளேன்.
ஐஎஸ்ஐஎஸ் தலைவர் சஹ்ரானுடன் கைகுலுக்கும் படத்தினையும் பொலிஸ் நிலையத்தில் வழங்கியுள்ளோம்.இது தொடர்பில் விசாரணைசெய்து ஐஎஸ்ஐஎஸ் தலைவர் சஹ்ரானுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான தொடர்பு என்ன என்ற சந்தேகத்தினை இலங்கையில் உள்ள அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் உள்ளது.