சமுர்த்தி வங்கிகளில் கைவிசேடம் வழங்கும் நிகழ்வு

தமிழ்-சிங்கள புத்தாண்டினை சிறப்பிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்கள்,வங்கிகளில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

சுpத்திரை புத்தாண்டில் அனைவருக்கும் கைவிசேடம் வழங்கும் புண்ணிய நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி வங்கிகளில் நடைபெற்றன.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கைவிசேட பிரதான நிகழ்வு புளியந்தீவு சமுர்த்தி வங்கியில் நடைபெற்றது.

புளியந்தீவு சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் எம்.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வழங்கிவைத்தார்.

இதன்போது சமுர்த்தி பயனாளிகள்,சமுர்த்தி வழங்கி உத்தியோத்தர்கள்,பொதுமக்களுக்கு பிரதேச செயலாளர் கலாசாரத்தின் அடிப்படையில் கைவிசேடங்கள் வழங்கிவைத்தார்.