கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

பெரியகல்லாறு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட நிகழ்வு –அனைவரையும் கவர்ந்த மேடை அலங்காரம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் மற்றும் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் ஏனைய சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றுள மாலை மட்டக்களப்பு,பெரியகல்லாறில் நடைபெற்றது.

பெரியகல்லாறு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் 11வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இந்த நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

பெரியகல்லாறு கலாசார மண்டபத்தில் விசேடமாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

பெரியகல்லாறு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் கே.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக சிவப்பிரியா வில்வரெட்னம் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் கழகத்தின் புதிய சீருடையும் கழகத்தின் தலைவரினால் அறிமுகம்செய்துவைக்கப்பட்டது.

இதன்போது பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் வெட்டுப்புள்ளிக்கு அதிகமான புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதேபோன்று பெரியகல்லாறு பகுதிகளில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள்,விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

பல்வேறு துறைகளிலும் சாதனைகள் கடைத்த மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

விளையாட்டுத்துறைக்கு அப்பால் பெரியகல்லாறு உட்பட அதனை அண்டிய பகுதிகளை இலக்காக கொண்டு பெரியகல்லாறு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் பல்வேறு சமூகப்பணியாற்றிவருவதுடன் கல்விக்கான பணிகளையும் ஆற்றிவருவது தொடர்பில் இங்கு கலந்துகொண்டவர்களினால் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.