பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சேவை திறன் வெகுமதி வழங்கும் நிகழ்வு


(லியோன்)


இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 152 வது  வருட நிறைவினை முன்னிட்டு சேவை திறன் பாராட்டு விழா  இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது


மட்டக்களப்பு மாவட்ட  பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களின்  சேவை திறனை பாராட்டும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்   நுவான் மென்டிஸ் ஒழுங்கமைப்பில்   கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எச் எஸ் கபில ஜயசேகர  தலைமையில்  பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வெகுமதி  வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது .

ஆரம்ப நிகழ்வாக  பாடசாலை மாணவர்களினால் பேன்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு அதிதிகள் பிரதான விடுதி மண்டபத்திற்கு  அழைத்து வரப்பட்டனர்

இதனைதொடர்ந்து பொலிஸ் கீதம் இசைக்கப்பட்டு ,மங்கள விளக்கேற்றலுடன்  நிகழ்வுகள் ஆரம்பமானது

மாணவர்களின்  வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான நிகழ்வில்  மாணவர்களுக்கும் ,நிகழ்வில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கும் பரிசளிப்புகளும் ,சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன்  பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவை திறனை பாராட்டி  வெகுமதியாக பணப்பரிசில்களும்  வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  எம் .உதயகுமார்  மற்றும் அதிகளாக மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து திணைக்கள முகாமையாளர் எ எல் எம் . பாறுக் ,மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப் பணிப்பாளர் வி லவக்குமார் ,மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர்  செல்வராஜா ,மட்டக்களப்பு ,மட்டக்களப்பு பொலிஸ் சமூக பாதுகாப்பு குழு தலைவர் ஸ்டீபன் ராஜன் ,அம்பாறை  மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் ,பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள் , மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,சிவில் சமூக பிரதி நிதிகள்,  உட்பட பலரும் கலந்துகொண்டனர் .