கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு


  (லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட   மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய ஆசிரியர் தின   நிகழ்வுகள்   பாடசாலை  அபிவிருத்தி குழு உறுப்பினர் அன்பழகன் ஒழுங்கமைப்பில் பாடசாலை ஆசிரியர்களின்  ஒழுங்கமைப்பில் அதிபர் . டி .அருமைத்துரை   தலைமையில்  மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது . 

ஆரம்ப  நிகழ்வாக மாணவர்களினால்  அதிதிகளையும் ,ஆசிரியர்களையும்   வரவேற்கும்  நிகழ்வு  நடைபெற்றது .

அதனை  தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன்  ஆசிரியர் கீதம்  இசைக்கப்பட்டு ஆசிரியர்  தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் , ஆசிரியர்களுக்கான  கௌரவிப்பு  நிகழ்வும் நடைபெற்றது  .
சமூகத்திற்கும்  நாட்டுக்கும்  நற்பிரஜைகளை உருவாக்குவதில் வழிகாட்டியாகவும் ,ஆசானாகவும் வழிநடத்துகின்ற ஆசிரியர்களை  கௌரவித்து நினைவு சின்னங்களும்   வழங்கப்பட்டன

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக மண்முனை வடக்கு  கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .அருள்பிரகாசம் கௌரவ  அதிதிகளாக மட்டக்களப்பு தாண்டவன்வெளி காணிக்கை அன்னை ஆலய பங்கு தந்தை ரமேஸ் கிறிஸ்டி ,மட்டக்களப்பு கள்ளியங்காடு ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய பிரதம குரு  சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர குருக்கள் மற்றும் மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய அதிபர் ,ஆசிரியர்கள் , கல்விசார ஊழியர்கள் மற்றும் அழைப்பு அதிதியாக மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி மத்திய நிலைய ஆசிரியர் திருமதி வி .மகேஸ்வரன் ,சிறப்பு அதிதியாக ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி ,பத்மா இராமநாதன் பாடசாலை  ஆசிரியர்கள் ,மாணவர்கள் பாடசாலை  அபிவிருத்தி  குழு  உறுப்பினர்கள்  என பலர் கலந்து சிறப்பித்தனர் .