மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் (படுவான் எஸ் நவா)

மாவட்ட இணைப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்தின் ருபா 42 மில்லியன் பொறுமதியான அபிவிருத்தியில் முதற்கட்டமாக ரூபா30 மில்லியன் நிதி அமைச்சர் கௌரவ.மனோ கணேசன் அ
வர்களினால் ஒதுக்கீடு…
தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1) பண்டாரியாவெளி நாமகள் வித்தியாலயத்திற்கான 10மில்லியன் பெறுமதியான வகுப்பறைக் கட்டிடத்திற்காக முதல் கட்டமாக 05 மில்லியனும்
2)மட்.பட்.கோவில்போரதீவு விவேகானந்தா மகா வித்தியாலயத்திற்கு 15 மில்லியன் பெறுமதியான மூன்று மாடிக் கட்டிடத்திற்காக முதற்கட்டமாக 08 மில்லியனும்
3) 15 மில்லியன் பெறுமதியான அம்பிளாந்துறை கலாச்சாரமண்டபத்திற்காக முதற்கட்டமாக 10 மில்லியனும்
4)பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டிடத்திற்காக 07 மில்லியன் ரூபாவுமாக மொத்தமா 30 மில்லியன் நிதி முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல காலமாக அபிவிருத்தியினைக் காணாமல் பல தேவைகளுடன் காணப்படும் பின்தங்கிய பிரதேசங்களில் கணேசமூர்த்தி கோபிநாத் அவர்களினால் இனங்காணப்பட்டு வழங்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கீட்டினை அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் அவர்கள் வழங்கியிருக்கின்றார்.

கடந்த மாதம் தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் கொளரவ மனோ கணேசன் அவர்களினால்  மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராக கணேசமூர்த்தி கோபிநாத் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.