மட்டக்களப்பு மாவட்டத்தின் 75வது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவியேற்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் 75வது மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக எம்.எஸ்.மெண்டிஸ் தமது கடமைகளை இன்று திங்கட்கிழமை காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.

பொலிஸ்மா அதிபரினால் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு அமைய கம்பளையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கராக கடமையாறற்p எம்.எஸ்.மெண்டிஸ் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய சமன்யட்டவர கொழும்பு தெற்கு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 75வது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.மெண்டிஸ்இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய முன்பாக அணி வகுப்பு மரியாதை நடைபெற்ற மத தலைவர்களின் ஆசியுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள்,பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.