மட்டக்களப்பு மாவட்டத்தின் 70ஆவது சுதந்திரத்தின நிகழ்வுகள்

(லியோன்)

இலங்கையின்  70 வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று  நடைபெற்றன .


மட்டக்களப்பு மாவட்டத்தில்  தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் மாவட்டத்தின் சகல அரச திணைக்களங்களிலும் மற்றும் அரச அலுவலங்களில் தேசிய கொடியேற்றப்பட்டு விசேட நிகழ்வுகள் இன்று நடைபெற்றது . 

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான  70ஆவது சுதந்திரத்தின நிகழ்வுகள் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் அரசாங்க அதிபர்  எம் .உதயகுமார் தலைமையில் மட்டகளப்பு வெபர் மைதானத்தில்  நடைபெற்றது .

ஆரம்ப நிகழ்வாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து அதிதிகளை பொலிசார், இராணுவம் மற்றும் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் , கலாசார நிகழ்வுகளுடன்   மட்டக்களப்பு வெபர் மைதானத்திற்கு  அழைத்துவரப்பட்டனர் .

இதனை தொடர்ந்து வெபர் மைதானத்தில் நடைபெற்ற  70 ஆவது சுதந்திரத்தின நிகழ்வில்  அரசாங்க அதிபர் தேசிய கொடியை  ஏற்றி சுதந்திர தின  நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார் .

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர  .மாவட்ட மேலதிக அரசாங்க திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்த , மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ்வரன் , மட்டக்களப்பு  பொலிஸ்  நிலைய   பொறுப்பதிகாரி   எம் .எம் .ஜி .டி. தீஹா வதுற மற்றும்  மதத்தலைவர்கள் ,பிரதேச செயலாளர்கள் ,பாதுகாப்பு படை தலைமை  அதிகாரிகள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,அரச திணைக்கள அதிகாரிகள் , பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,அரச அலுவலக அதிகாரிகள் ,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர் .