ஆற்றல் தொழில் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)

இளைஞர்களுக்கான ஆற்றல் பயிற்சி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மனை பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டத்தின் ஊடாக தொழில் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு  சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது .


இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை மற்றும் IFPS நிறுவனம் ஏற்பாட்டில்  முஸ்லிம் எயிட்  நிறுவனம் மற்றும் அபிப் சரதி   நிறுவன நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்ப மாணவர்களில்  கல்வியினை நிறைவு செய்து தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும் இளைஞர்களுக்கு  ஆறுமாத இலவச இயந்திரவியல் , நிலா அளவை , பட வரைஞர் ஆகிய தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சியினை நிறைவு செய்த இளைஞர்களுக்கு தொழில் உபகரண தொகுதிகளும் , சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு முஸ்லிம் எயிட் நிறுவன இலங்கைக்கான பணிப்பாளர் எ. சி . பைசர் கான் தலைமையில் இன்று மட்டக்களப்பு கல்லடி கிரீன் காடன் விடுதியில்  நடைபெற்றது .

இந்நிகழ்வில் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட 80 இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது .


இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக  மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் எஸ் . ரங்கநாதன் , முஸ்லிம் எயிட் நிறுவன திட்ட முகாமையாளர் எம்.டி.எம் . பஸ்லான் , ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ் .எல் . எம் .ஹானிபா மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் , அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் ,  முஸ்லிம் எயிட்  நிறுவன உத்தியோகத்தர்கள் , தொழில் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பயிற்சி பெற்ற இளைஞர்கள் கலந்துகொண்டனர்