தாண்டவன்வெளி கிராம சேவை பிரிவில் உள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்வதற்கான அடிகள் நாட்டும் நிகழ்வு

(லியோ)

 மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட தாண்டவன்வெளி கிராம சேவை பிரிவில் உள்ள விளையாட்டு மைதானத்தை  புனரமைப்பு  செய்வதற்கான அடிகள் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .  

இலங்கை ஜனநாயக சமத்துவ குடியரசின்  மாகான சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின்    வடக்கு - கிழக்கு  உள்ளுராட்சி சேவைகள்  மேம்படுத்தும் திட்டத்தின் நெல்சிப் நிறுவன நிதி அனுசரணையில்   மட்டக்களப்பு மாநகர சபையின் மேற்பார்வையில் கீழ் மட்டக்களப்பு   தாண்டவன்வெளி கிராம சேவை பிரிவில் உள்ள விளையாட்டு மைதானத்தை  புனரமைப்பு  செய்வதற்கான  அடிகள் நாட்டும் நிகழ்வு சிட்டி லக்கி விளையாட்டு கழக தலைவர் எஸ் .இருதயராஜா தலைமையில்  இன்று இடம்பெற்றது .

அடிகள் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர்  எம் . உதயகுமார் மற்றும்  உதவி ஆணையாளர் .என் .தனஞ்சயன் , பிரதம கணக்காளர் எ . ஜோன்பிள்ளை ,பொறியிலாளர் டி . தேவதீபன் ,மாநகர சபை உத்தியோகத்தர்கள், சிட்டி லக்கி விளையாட்டு கழக உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர் .


தாண்டவன்வெளி கிராம சேவை பிரிவில் உள்ள விளையாட்டு மைதானத்தை  புனரமைப்பு  செய்வதற்காக  நெல்சிப் நிறுவனத்தினால் 6,55,557,30 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறுப்பிடத்தக்கது .