புனித மிக்கேல் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

(லியோ)
 இலங்கையின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.


கல்லூரி அதிபர் .ஆர் .பெஸ்லியோ வாஸ் தலைமையில் இந்த பரிசளிப்பு விழா கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கான பிரிவின் பணிப்பாளர் .பி .என் . இளையபெரும, கௌரவ விருந்தினராக கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கான பிரிவின் பிரதி பணிப்பாளர் ஜனாப் . எம் . ஆர் . எம் . இர்ஸான், விசேட விருந்தினர்களாக  மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர்  கே . பாஸ்கரன் ,கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் அபிவிருத்தி நிலைய இயக்குனர்  கலாநிதி  . சுதர்ஷன் , மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக பொறியியலாளர்  ஆர் . கிருஷ்ணதாசன் மற்றும் அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் , கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , கல்லூரி அபிவிருத்தி குழு  உறுப்பினர்கள் , பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர் .

 கல்லூரி பரிசளிப்பு விழாவில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள்  நடைபெற்றதுடன் , நடத்தப்பட்ட பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர் .