தமிழரசுக்கட்சியினால் இரண்டாவது தடவையாக இந்த அஞ்சலிக்கூட்டம் நல்லையா வீதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன். ஞா.சிறிநேசன். கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,பொன்.செல்வாசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மங்கையற்கரசியாரின் உருவப்படத்திக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுரைகள்; நடைபெற்றன.
இந்த அஞ்சலி கூட்டத்திற்கு பெருமளவான தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.