முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதிரி வீட்டுத்தோட்டம் அமைத்தல் தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கு

(லியோன்)


முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதிரி வீட்டுத்தோட்டம்  அமைத்தல்  தொடர்பான  ஒரு நாள் கருத்தரங்கு இன்று  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட   முன்பள்ளி ஆசிரியர்களுக்கான  மாதிரி வீட்டுத்தோட்டம்  அமைத்தல்  தொடர்பான  ஒரு நாள் கருத்தரங்கு இன்று  மண்முனை வடக்கு  பிரதேச செயலாளர் வி. தவராசா தலைமையில்  பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது .


மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களம்  மட்டக்களப்பு மத்திய  வலயத்தின் கீழ் இயங்கும் கல்லடி விவசாயப் போதனாசிரியர் பிரிவில்   நகர் புற மாதிரி வீட்டுத்தோட்ட  பயிர்செய்கைகான ஊக்குவிக்கும்  திட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது .

இதேபோன்று  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக   முன்பள்ளி   அபிவிருத்தி செயல்திட்டத்தின்  ஒழுங்கமைப்பில்  மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட   முன்பள்ளி ஆசிரியர்களுக்கான  மாதிரி வீட்டுத்தோட்டம்  அமைத்தல்  தொடர்பான  கருத்தரங்கு  இன்று இடம்பெற்றது .

இடம்பெற்ற கருத்தரங்கு  நிகழ்வில்  வளவாளராக கல்லடி விவசாய போதனாசிரியர் திருமதி தெய்வமனோஹாரி  கலந்துகொண்டார்  .

இந்த நிகழ்வின்  போது முன்பள்ளி ஆசிரியர்களுக்கு    மாதாந்தம் வழங்கப்பட்டும்   கொடுப்பனவுகளும்  மற்றும்  மாதிரி வீட்டுதோட்டதிற்கான   மரக்கன்றுகளும் , விதைநாற்றுகளும் வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில்  மண்முனை வடக்கு பிரதேச செயலக  முன்பள்ளி  பருவ அபிவிருத்தி  உத்தியோகத்தர் . டி . மேகராஜ் , முன்பள்ளி அபிவிருத்தி உதவி கல்வி பணிப்பாளர்  எம் . புவிராஜ்  மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட   முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .