மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சட்டத்தரணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
களுதாவளை வன்னியனார் வீதிக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் எருவிலை சேர்ந்த இளையதம்பி சோமசுந்தரம்(65வயது)என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள நீதிமன்றத்திற்கு கடமைக்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது முச்சக்கர வண்டியுடன் மோதுண்டதன் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்தவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
முச்சக்கர வண்டி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.