ஏறாவூரில் 14வயது சிறுமியை துஸ்பிரயோகப்படுத்திய 17வயது இளைஞன் கைது

மட்டக்களப்பு,ஏறாவூர் பிரதேசத்தில் வைத்து 14வயது சிறுமி ஒருவரை பாலியல்துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கிய 17வயது இளைஞன் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


வாகரை,மாங்கேணியை சேர்ந்த சிறுமியை ஏறாவூர் பகுதிக்கு அழைத்துவந்து குறித்த சிறுமையை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சுனாமியின்போது தாய்தந்தையை இழந்த குறித்த சிறுமி சிறிய தாயின் வளர்ப்பில் இருந்துவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் 17வயது இளைஞனே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸர்ர் மேலும் தெரிpவித்தனர்.