ஊறணி அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கின் கன்னிக்கால் வெட்டும் சடங்கு

மட்டக்களப்பு ஊறணி அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கின் கன்னிக்கால் வெட்டும் சடங்கு நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது.


கடந்த 22ஆம் திகதி ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

நேற்று மாலை ஆலயத்தின் இடம்பெற்ற விசேட பூஜையினைத்தொடர்ந்து அம்பாள் வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

பல வருடமாக இந்த கன்னிக்கால் நடைபெறும் நிகழ்வானது இருதயபுரம் ஏழா குறுக்கில் உள்ள இல்லம் ஒன்றில் நடைபெற்றுவருகின்றது.

வீதியுலா சென்ற அம்பாள் ஏழாம் குறுக்கில் உள்ள இல்லத்துக்கு சென்று அங்கு விசேட பூஜைகள் நடைபெற்று இந்த கன்னிக்கால் வெட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு செல்லும் அம்பாளுக்கு வீதியெங்கும் நிறைகுடங்களை வைத்து அடியார்கள் வழிபட்டனர்.






Add caption