இந்த நாட்டில் ஒரு சுதந்திரமான சூழ்நிலையினை ஐக்கிய தேசிய கட்சியே உருவாக்கியதாக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது தேர்தல் அலுவலகம் நேற்று இரவு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் புதுக்குடியிருப்பில் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மண்முனைப்பற்று பிரதேச ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களினால் திறந்துவைக்கப்பட்ட நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான சோ.கணேசமூர்த்தி இந்த அலுவலகத்தினை பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
இதன்போது வேட்பாளர் கணேசமூர்த்தியின் தேர்தல் பிரசாரக்கூட்டமும் நடைபெற்றதுடன் இந்த கூட்டத்தில் அதிபர் அகிலேஸ்வரனும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்வின்போது புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு வேட்பாளர் கணேசமூர்த்திஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.