தேர்தலில் சிறந்த வேட்பாளர்களை தெரிவுசெய்யுமாறு வலிறுத்தி கையெழுத்து பெறும் போராட்டம்

மார்ச்12 பிரகடனம் மூலம் சிறந்ததோர் அரசியலுக்காக என்னும் தொனிப்பொருளில் பிரஜைகளை விழிப்பூட்டும் வாகனம் இன்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பினை வந்தடைந்தது.


தேர்தலுக்கான வேட்புமனு வழங்கும்போது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய அளவுகோல்கள் தொடர்பில் 2015 மார்ச் மாதம் 12ஆம் திகதி இலங்கையின் அரசியல் கட்சிகளின் தலைவர்களினால் கைச்சாத்திடப்பட்டது.

இந்த நாட்டில் அரசியல் திருப்புமுனை ஏற்பட்டிருக்கும் தருணத்தில் சிறந்ததோர் அரசியல் கலாசாரத்தினை கட்டியெழுப்பும் வகையில் பவ்ரல் அமைப்பு இந்த விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றது.

பவரல் இது தொடர்பில் நாட்டு பிரஜைகளை விழிப்பூட்டு வாகன அணிவகுத்து கையெழுத்து பெறுவதுடன் விழிப்பூட்டும் பணியையும் மேற்கொண்டுவருகின்றது.

இலங்கையின் சகல பாகங்களுக்கும் செல்லும் இந்த வாகன அணியானது இன்று காலை திருகோணமலையில் தமது பிரசாரத்தினை மேற்கொண்டதுடன் இன்று மாலை மட்டக்களப்பினை வந்தடைந்தது.

எகட் கரித்தாஸ் அமைப்பினர் இந்த வாகன அணியை வரவேற்றதுடன் கையெழுத்துப்பெரும் பணியையும் மேற்கொண்டனர்.

இநத நிகழ்வில் பவ்ரல் அமைப்பின் பிரதிநிதிகள் எகட் கரித்தாஸ் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

அரசியல் கட்சிகளில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சிறந்த பிரஜைகளை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு அரசியல் கட்சிகளுக்கு அழுத்தங்களை வழங்கும் வகையில் இங்கு வழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.