கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் எடுத்த முயற்சியின் முதல் நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் பொதுமக்களின் சகல பிரச்சினைகளுக்கும் உடனடியான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலான நடமாடும் சேவை இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையில் இந்த நடமாடும் சேவைகள் கிழக்கு மாகாண அனைத்து திணைக்களங்களையும் உள்ளடக்கியதாக நடைபெற்றுவருகின்றது.
இந்த நடமாடும் சேவையில் காணி, விவசாயம், வீதி, வடிகான், வீடமைப்பு, பாடசாலை, ஆசிரியர்கள், மாணவர்கள், முதியோர், இளையோர், கிராம அபிவிருத்தி சங்கங்கள் என்று பல பிரச்சனைகளுக்கு தீர்வினை இங்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக நடைபெற்றுவருகின்றன.
இதன் ஆரம்ப விழா இன்று காலை கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட்டின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி,விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,காணி அமைச்சர் ஆரியவதி கலபதி உட்பட கிழக்கு மாகாணசபையின் தவிசாளர்,பிரதி தவிசாளர்,மாகாணசபை உறுப்பினர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது திணைக்கள ரீதியில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் சிறந்த பாடசாலைகளுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் அதிதிகளினால் நடமாடும் சேவைகள் கூடங்களும் பார்வையிடப்பட்டதுடன் பொதுமக்களுடனான கலந்துரையாடலும் நடைபெற்றன.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம்.