சந்திவெளி - கோரகல்லி மடு சிறி ரமண மகரிசி வித்தியாலயம்

 மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.


மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இந்த நிவாரண பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதற்காக தேவையான நிதியை ஒதுக்கீடுசெய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உடனடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ் நிலங்கள் மூழ்கிவருவதுடன் மக்கள் தொடர்ந்து வீடுகளில் இருந்துவெளியேறி பாடசாலைகளில் தஞ்சமடைந்துவருகின்றனர்.