திருவெண்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மிகவும் முக்கியத்துவமிக்க நிகழ்வான திருவாசக முற்றோதல் நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் திருவாச முற்றோதல் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பின் பிரசித்திபெற்ற ஆலயமாக அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவாசகமுற்றோதல் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட சைவத்திரு நெறி மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த திருவாசகமுற்றோதல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

ஆலய தலைவர் அகிலன் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் பெருமளவு பன்னிசை விற்பன்னர்கள் திருவாசக முற்றோதலில் பங்குகொண்டனர்.

இதேபோன்று மட்டக்களப்பு,கூழாவடி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்தில் திருவாசகமுற்றோதல் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

கூழாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் இரா.நாகலிங்கம் கலந்துகொண்டு திருவாச முற்றோதல் நிகழ்வினை சிறப்பாக நடத்தினார். இந்த நிகழ்வில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.