வீசா காலாவதியாகி தங்கியிருந்து இந்தியர் கைது

இந்தியாவிலிருந்து சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து வீசா காலாவதியான நிலையில் தங்கியிருந்த ஒருவரை களுவாஞ்சிக்குடி பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறுமன்வெளி கிராமத்தில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவசர பொலிஸ் இலக்கத்துக்குக்கிடைத் ததகவலையடுத்தே இவர் கைது செய்யப்பட்டதாகவும், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவத்தனர்.

கைது செய்யப்பட்டவர் தமிழ்நாட்டின் கன்னாயாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.