ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வின் இறுதி நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் கே.நரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்ட கல்வி அதிகாரி டேவிட் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது மாணவர்கள் வாசிப்பின் முக்கியத்துவம் மற்றும் வாசிப்பால் அடையும் பயன்கள் தொடர்பில் எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட பதாகைகளையும் ஏந்தியிவாறு விழிப்புணர்வு பேரணியொன்றினையும் நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து பாடசாலை நூலகத்தில் ஆசிரியை திருமதி சீ.ஆர்.மனோகரன் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்றது.

இதற்போது தேசிய வாசிப்பு மாதத்தினையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.