கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் மாணவர்கள் இன்றும் ஆர்ப்பட்டம்

( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் மாணவர்கள் இன்றும் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் ஸ்த்தம்பிதம்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கல்வியதிகாரியின் பிணையை ரத்துச் செய்யுமாறும், அவரை இடம் மாற்றுமாறும், அக்கல்வியதிகாரியின் இரு சகோதரர்களையும் இப்பாடசாலையை விட்டு இடம் மாற்றுமாறும், குடும்ப ஆட்சியிலிருந்து பாடசாலையை காப்பாற்றுமாறும் கோரிய சுலோகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு பொம்மையும் எடுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

பாடசாலை வளாகத்தில் ஆரம்பித்த இவ்வார்ப்பாட்டம் பிரதான வீதிக்குச் சென்று சாய்ந்தமருது பிரதாக வீதி ஊடாக சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் , கல்யாண வீதியால் பாடசாலையை வந்தடைந்தனர்.

பாடசாலை வளாகத்திற்குள் வந்த மாணவர்கள் ஆத்திரத்தில் பொம்மையை சேதப்படுத்தி கால்களால் மிதித்தனர்.

இன்று காலையில் சொற்ப அளவில் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களை ஒன்று கூட்டி வகுப்புகளுக்குச் செல்லுமாறு  ஆசிரியர்கள் பணித்தனர். அதைத்தொடர்ந்து வகுப்புகளுக்கு மாணவர்கள் சென்று அமர்ந்து கொண்டனர்.

பின்னர் திடிரென பாடசாலைக்கு வெளியில் ஒலிபெருக்கி மூலம் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலர் அழைக்கப்படடு  பாடசாலையின் கதவுகள் கட்டாயப்படுத்தி திறக்கப்ட்டதன் பின்னரே இவ்வார்ப்பட்டம் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.