இதன்போது இவருக்கு மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் பொலிசாரினால் வரவேற்பளிக்கப்பட்டது. மட்டக்களப்புக்கு வருகை தந்த இவரை, கிழக்கு மாகாண சிரேஸ்;ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர,மட்டக்களப்பு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் இந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து பொலிசாரின் அணி வகுப்பு மரியாதை இடம்பெற்றது. இதனையடுத்து பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஸ்;ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் செயலாளருக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
இதன் பின்னர் மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் அவர் பங்குபற்றினார்.