பிரித்தானிய தூதுக்குழுவினர் மட்டக்களப்புக்கு விஜயம்

இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதுவர் ஜோன்றேக்கிங் தலைமையிலான பொதுநலவாய மாநாட்டு பிரதி நிதிகள் குழுவொன்று (திங்கட்கிழமை) இன்று காலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்தது.

இவர்கள் மட்டக்களப்பு நரிலுள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜும் ஆபள்ளிவாயலுக்கு சென்று பள்ளிவாயல் நிருவாகிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் இந்து ஆலயம் மட்டக்களப்பு நாவற்குடா விஸேட தேவையுடை பாடசாலை ஆகிய இடங்களுக்கும் சென்று அங்குள்ள நிருவாகிகளுடன் கலந்துரையாடினர்.

நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொது நலவாய மாநாட்டிற்கு வரும் பிரித்தானிய இளவரசர் மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ளதால் அதன் ஒழுங்குகள் குறித்து ஆராயும் முகமாக மட்டக்களப்புக்கு தாம் வருகைதந்ததாக இதன் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பிரித்தானிய இளவரசர் மட்டக்களப்புக்கு வருகை தரும் இடங்கள் பற்றியும் இதன் போது இவர்களுடன் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் மட்டக்களப்பு நகரில் நிர்மானிக்கப்பட்டுள்ள காந்தியின் உருவச்சிலை மற்றும் மட்டக்களப்பு கேட் என்பவற்றையும் பார்வையிட்டனர்.