நாட்டில் மோசமான வானிலை: பாடசாலைகளுக்கு இன்று சிறப்பு விடுமுறை!

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் கல்வி மண்டலத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை (15) சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய ஹட்டன் மண்டல கல்வி அலுவலகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, ஹட்டன் கல்வி மண்டலத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்குமாறு, அங்குள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய தினம் ஏனைய தேவைகளுக்காக பாடசாலைக்கு வருவரை தவிர்க்குமாறும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.