மாணவர்களின் வருகை வீழ்ச்சி!!


நோன்பு கால விடுமுறையின் பின்னர் முதலாம் தவணைக்காக முஸ்லிம் பாடசாலைகள் இன்று (4) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் இன்றைய தினம் மாணவர்களின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளது.

நேற்று (3) நோன்புப் பெருநாள் தினம் என்பதால் இன்று பாடசாலைக்கு குறைவான மாணவர்கள் சமூகமளித்துள்ளதாகவும் ஆசிரியர்களின் வரவு கணிசமான அளவில் இருந்ததாகவும் அதிபர்கள் மேலும் தெரிவித்தனர்.