16 வது போராளர் மாநாடு யாழில்

தமிழரசு கட்சியின் 16வது தேசிய மாநாடு  யாழ்ப்பாணத்தில் நேற்று 29,06.2019 சனிக்கிழமை ஆரம்பமானது .

காலையில் மத்திய குழு கூட்டமும் , மாலை நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் மாதர் முன்னணி மற்றும் வாலிபர் முன்னணி மாநாடுகளும் நடந்தேறின.

இரண்டாம் நாள் இன்று ஞாயிற்றுக்கிழமை (30.06) காலையில் 09.30 மணியளவில் யாழ் தந்தை செல்வா சதுக்கத்தில் தமிழரசு கட்சியின் ஸ்தாபகரும், தமிழர்களால் தந்தை என போற்றப்படும் தந்தை செல்வாவின் சமாதிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தந்தை செல்வா சதுக்கத்திலிருந்து நடைபவனியாக  மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் யாழ்வீரசிங்கம் மண்டபம்
சென்று தமிழரசு கட்சியின் கொடியேற்றி, தமிழ் மொழி வாழ்த்து இசைத்து, மங்களவிளக்கேற்றலுடன் போராளர் மாநாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.