சிறு நடுத்தர உணவ உரிமையாளர்கள் மற்றும் உணவக சிற்றுளியர்களுக்கான சர்வதேச தரத்திலான தேர்ச்சி பயிற்சி


(லியோன்)

சிறு நடுத்தர உணவக உரிமையாளர்கள்  மற்றும் உணவக  சிற்றுளியர்களுக்கான சர்வதேச தரத்திலான அடிப்படை தேர்ச்சி பயிற்சியின் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது
.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில்  அவுஸ்ரேலியா  அரசாங்கத்தின் நிதி அனுசரணையில் கீழ்  திறன் அபிவிருத்தி அமைச்சின் உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன் நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட சிறு நடுத்தர உணவக உரிமையாளர்கள்  மற்றும் உணவக  சிற்றுளியர்களுக்கான சர்வதேச தரத்திலான அடிப்படை தேர்ச்சி பயிற்சியின் ஆரம்ப நிகழ்வு  மட்டக்களப்பில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி .சுதர்ஷினி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்

மட்டக்களப்பு மாவட்ட உள்ளாசத்துறையினை சர்வதேச  தரத்தில் உயர்த்தும் நோக்குடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட 96  உணவகங்களுக்கும் ,384  உணவக சிற்றுளியர்களுக்கும் அடிப்படை தேர்ச்சி பயிற்சிகள்  வழங்கப்பட்டு சர்வதேச தரத்தில் அங்கிகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன

இதற்கான ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பில் தனியார் விடுதி ஒன்றில்  நடைபெற்றது 

இதன் போது சிறு தொழில் நடுத்தர வர்த்தக சமூகம் ஒன்றினை உருவாக்கும் பொருட்டு  , தொழில் , வர்த்தக அறிவு , சந்தைப்படுத்தல் திறமை ,ஆற்றல்களை மேம்படுத்தல் மற்றும் புதிய சந்தை வாய்ப்புக்களை  இனங்காண்பது தொடர்பாக விடயங்கள் கலந்துரையாடப்பட்டது

இந்நிகழ்வு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதம நிறைவேற்று அதிகாரி கே. குகதாஸ் ஒழுங்கமைப்பில் மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன தலைவர் எம் எச்  எம் .நளீம்  தலைமையில் நடைபெற்றது .


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட  செயலாளர்  எ . நவேஸ்வரன் , மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன செயலாளர் எ .ரமேஷ் மற்றும் பிரதேச செயலாளர்கள்  சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் வியாபார மேம்பாட்டு வளவாளர்கள் மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன உறுப்பினர்கள் சிறு நடுத்தர  உணவக உரிமையாளர்கள் ,உணவக சிற்றுளியர்கள் கலந்துகொண்டனர்