தேசிய தமிழ் தின போட்டியில் பெருமை சேர்ந்த மாணவர்களுக்கு தேற்றாத்தீவில் மகத்தான வரவேற்பு

அகில இலங்கை தமிழ் தின போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட மாணவர்கள் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர்.

தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட மேடை நாடகப்போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம்பெற்று சாதனை படைத்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று தேற்றாத்தீவில் நடைபெற்றது.

தமிழ் மொழி தினப்போட்டியில் மேடை நாடக போட்டியில் வெற்றி பெற்ற தேற்றாத்தீவு மகா வித்தியாலய  மாணவர்கள் இந்த சாதணையினை படைத்துள்ளனர்.

கிராமத்திற்கும் மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்த இந்த மாணவர்களை கௌரவிக்கும் வகையில் கொம்புச்சந்திபிள்ளையார் ஆலயத்தின் ஏற்பாட்டில் கொம்புச்சந்திபிள்ளையார் ஆலயத்தின் விசேட பூஜை இடம் பெற்றதை தொடர்ந்து பாடசாலை வளாகத்திற்கு மாலை அணிவித்து பாண்ட் பாத்தியத்துடன் அழைத்து செல்லப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நிதியமைச்சு திறைசேரியின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி மூ.கோபாலரெட்ணம்,சிறப்பு அதிதிகளாக உதவி கல்விபணிப்பாளர் ந.நேசகஜேந்திரன்,சேவைகால ஆலோசகர் வ.சுரேஸ் மற்றும் தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆசிரியர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்தனர்.