உலக YMCA தினத்தை முன்னிட்டு விசேட இரத்ததான நிகழ்வு


(லியோன்)


உலக  வை  .எம். சி .எ   ஸ்தாபக  தினத்தை முன்னிட்டு  வை எம் சி எ  நிறுவனத்துடன் மட்டக்களப்பு சுகாதார சேவை நிலையம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பு வை எம் சி எ  நிறுவனத்தின் தலைவர் வி இ .தர்ஷன் தலைமையில்  நடைபெற்றது


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் நிலவுகின்ற இரத்தத் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் வைத்தியசாலை வைத்தியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவும் இணைந்து இந்த  மாபெரும் இரத்ததான முகாம்   நடைபெற்றது 

இந்த இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர்  வைத்தியர் கே .விவேக் , வைத்தியசாலை  தாதிய  உத்தியோகத்தர்கள்,  வை எம் சி    நிறுவன உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் , மட்டக்களப்பு விமானப்படை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.