காத்தான்குடி பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்


(லியோன்)

 இலங்கை  பொலிஸ்மா  அதிபரின்  சிந்தனைக்கு அமைவாக    சமூக  சேவைகள்  தினமாக  பிரகடனப்படுத்தப்பட்டு   நாடளாவிய  ரீதியில் அணைத்து  பொலிஸ் பிரிவுகளில் ஒரு   மாதத்திற்கான  காவல் அரண்கள் அமைக்கப்பட்டு  விசேட     பொலிஸ் நடமாடும்   சேவைகள் இடம்பெற்று வருகின்றன 
   

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் பிரிவுகளிலும் ஒரு   மாதத்திற்கான   காவல் அரண்கள் அமைக்கப்பட்டு பொலிஸ் நடமாடும்   சேவைகள் இடம்பெற்று வருகின்றன .

மட்டக்களப்பு  காத்தான்குடி பொலிஸ்  பிரிவுக்குற்பட்ட  தாளங்குடா வேடர் குடியிருப்பு குடும்ப நல உத்தியோகத்தர்களின் பணிமனை  மண்டபத்தில்    கிராமத்துக்கு பொலிஸ் “ எனும் தலைப்பின் கீழ்  ஒரு   மாதத்திற்கான   பொலிஸ் நடமாடும்   சேவைகள் இடம்பெற்று வருகின்றது .

பொலிஸ்மா  அதிபரின்  ஆலோசனைக்கு  அமைவாகவும்  பொதுமக்களும்  பொலிசாரும்  இடையில்   சிறந்த  நல்லுறவையும்   ஏற்படுத்தும் வகையில் சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் நிலவுகின்ற இரத்தத் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் காத்தான்குடி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஆதார வைத்திய சாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவும் இணைந்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்துரி ஆராச்சி தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது  

இந்த இரத்ததான நிகழ்வில் காத்தான்குடி ஆதார  வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர்  எம் எம் எம் .அயாஸ்  , மட்டக்களப்பு , காத்தான்குடி வைத்தியசாலைகளின்  தாதிய  உத்தியோகத்தர்கள்,  பொலிஸ் உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.