பாடசாலைகள் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முகாம்



 (லியோன்)


மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களுக்கான  முதல் கட்ட பயிற்சி முகாம் மட்டக்களப்பு இந்து கல்லூரி விளையாட்டு மைதானத்தில்  நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள்  மட்டத்தில் சிறந்த கிரிகெட் வீரர்களை  உருவாக்கி அவர்களின் விளையாட்டு திறன்களை விருத்தி செய்து அவர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்காக கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களுக்கான  முதல் கட்ட பயிற்சி முகாம் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது   ,   

பிரிடிஸ் தமிழ் கிரிகெட் அமைப்பின் அனுசரணையில்  மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிகெட் பயிற்றுவிப்பாளர்களுக்கான நான்கு கட்ட பயிற்சி முகாம்கள் நடைபெற்றவுள்ளது ,அதன்  முதல் கட்ட பயிற்சி முகாம் இன்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது ,

இதன் முதல் கட்ட பயிற்றுவிப்பாளர்களுக்காக இந்து கல்லூரி விளையாட்டு மைதானத்தில்  அரங்கில் நடைபெற்ற பயிற்சி முகாமில்  மட்டக்களப்பு இந்து கல்லூரி ,மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி , மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை ,  களுதாவளை மகா வித்தியாலயம் , பட்டிருப்பு தேசிய பாடசாலைகளின் கிரிகெட் பயிற்றுவிப்பாளர்கள் கலந்துகொண்டனர்

கிரிகெட் சங்கத்தின் தலைவரும் ,மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரி  அதிபர் ஜே ஆர் பி .விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரிடிஸ் தமிழ் கிரிகெட் அமைப்பின் செயலாளர் கே . ஜெயராஜ் ,இலங்கை கிரிகெட் அணியின் வேகபந்து பயிற்றுவிப்பாளர் ரவீந்திர புஸ்பகுமார ,கிழக்குமாகாண கிரிகெட் பயிற்றுவிப்பாளர்  அன்வர் டீன் , மாவட்ட கிரிகெட் பயிற்றுவிப்பாளர் நிலந்த விமலவீர ,   பாடசாலையின் விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் ,இந்து கல்லூரி  அதிபர் எஸ் டி . முரளிதரன் ,  மிக்கேல் கல்லூரி விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்   கே .சகான் ,கிரிகெட் சங்க அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்