கிழக்குமாகாண அரச அலுவலக அதிகாரிகளுக்கு தமிழ் ,சிங்கள மொழி தொடர்பான ஒருநாள் பயிற்சி நெறி

(லியோன்)

கிழக்குமாகாண அரச அலுவலக  மற்றும்  திணைக்கள  அதிகாரிகளுக்கு தமிழ் , சிங்கள  மொழி  தொடர்பான   ஒருநாள்  பயிற்சி நெறி மட்டக்களப்பில் நடைபெற்றது


தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் கீழ் இலங்கை தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அரச மொழிக்கொள்கையினை  அமுலாக்கும்  பொருட்டு  தேசிய  சகவாழ்வு கலந்துரையாடல்கள்  அமைச்சின் கீழ்  நடைமுறை படுத்தி வருகின்ற தேசிய மொழி கொள்கை  வேலைத்திட்டத்தின்    தமிழ் மொழி  அரச அலுவலக அதிகாரிகளுக்கு  சிங்கள  மொழியும் ,சிங்கள  மொழி  அரச அலுவலக அதிகாரிகளுக்கு தமிழ்  மொழியும்  கற்பிக்கும்  முறைமையினை   தேசிய  மொழி  மற்றும்  பயிற்சி  நிறுவனம் மாகாண  ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது . 

இந்த ஒன்பதாவது  செயல்திட்டமானது கிழக்குமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டது .

தேசிய  மொழிக்கல்வி  மற்றும்  பயிற்சி   நிறுவன  உதவிபணிப்பாளர்               கணேசமூர்த்தி  கோபிநாத்  ஒழுங்கமைப்பில் தேசிய மொழிக்கல்வி  மற்றும் பயிற்சி  நிறுவனத்தின்    கிழக்கு மாகான முகாமைத்துவ அபிவிருத்தி திணைக்களம்  இணைந்தது  கிழக்குமாகாண அரச அலுவலக  மற்றும்  திணைக்கள அதிகாரிகளுக்கு தமிழ் , சிங்கள மொழி  தொடர்பான   ஒருநாள்  பயிற்சி நெறி தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி  நிறுவன  மொழித்திறன் விருத்தி செயல்திட்ட பணிப்பாளர் நாயகம் பிரசாத் ஆரியரத் தலைமையில் மட்டக்களப்பு  மண்முனை வடக்கு பிரதேச செயலக  மண்டபத்தில் இன்று  நடைபெற்றது   
                                                              
இந்தபயிற்சி  நெறியில்  கிழக்குமாகாண  அரச  அலுவலகம்  மற்றும்               திணைக்கள அதிகாரிகள்  கலந்துகொண்டனர் .