“மகிழ்ச்சியான குடும்பத்திற்கு ஆரோக்கியமான பெண்கள் “ எனும் தொனிபொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

(லியோன்) 


சர்வதேச மகளிர் தின நிகழ்வினை சிறப்பிக்கும் விசேட நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில்  (10) வெள்ளிக்கிழமை  நடைபெற்றது .


“மகிழ்ச்சியான குடும்பத்திற்கு ஆரோக்கியமான பெண்கள் “ எனும் தொனிபொருளில்  சமுக அபிவிருத்தி பிரிவு மற்றும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து நடாத்தும்  சர்வதேச மகளிர் தின நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது .

இந்த நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் சமுர்த்தி திட்டத்தின் மூலம் தனது குடும்பத்தினை மேம்படுத்தும் பயனாளிகளில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பகுதியில் தெரிவு செய்யப்பட பெண்கள்  தலைமையில்  வாழும் குடும்ப பெண்களுக்கு சமூக அபிவிருத்தி மன்றத்தினால் வீடு திருத்துவதற்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது .

இதில் ஒருவருக்கு 50ஆயிரம் ரூபா வீதம் 16 குடும்ப பெண்களுக்கு  08 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டது .

இதனுடன் இனைந்ததாக மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பகுதியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கல்விக்காக புலமைப்பரிசில் உதவி தொகை சமூக அபிவிருத்தி மன்றத்தினால் வழங்கப்பட்டது .  
இதில் ஒரு மாணவருக்கு மாதாந்தம் 500 ரூபா வீதம் 321 மாணவர்களுக்கு   1926000 ரூபா உதவி தொகை வழங்கப்பட்டது .


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பெண்களின் தேவைக்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பின் இனைப்பாளர் திருமதி ஆர் .ருத்ராதேவி ,பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ் .யோகராஜா , உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ் ரதிஸ்குமார், திவிநெகும முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி . கே .நிர்மலா , திவிநெகும தலைமையக முகாமையாளர் திருமதி .செல்வி வாமதேவன் ,  மண்முனை வடக்கு பிரதேச செயலக  கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர்  எஸ் .தில்லைநாதன் ,அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் திருமதி .வி .சசிதரன் , சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ் .விஜெகுமார் மற்றும் சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , பாடசாலை மாணவர்கள் ,சமுர்த்தி பயனாளிகள் கலந்துகொண்டனர் .