சண்முகம் ஞாபகார்த்த கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பம் -முதல்போட்டியில் டிஸ்கோ வெற்றி

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் நடாத்திய சபாபதிப்பிள்ளை சண்முகம் ஞாபகார்த்த கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமர்சையாக ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட வரலாற்றினைக்கொண்ட கோட்டமுனை விளையாட்டுகழகம் கடந்த காலத்தில் விளையாட்டுத்துறை தொடர்பிலான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.

அதனடிப்படையில் மட்டக்களப்பின் பிரபல வர்த்தகர் சபாபதிப்பிள்ளையின் அனுசரணையுடன் சபாபதிப்பிள்ளை சண்முகம் ஞாபகார்த்த கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டுக்கழக தலைவர் ஏ.சடாச்சரராஜா, பிரபல வர்த்தகர் எஸ்.சிவபாதசுந்தரம்,கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் விளையாட்டுக்குழு தலைவர் கே.விஜயகண்ணன் மற்றும் ஏ.திவாகரன் உட்பட கழகத்தின் முக்கிஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இன்றை முதல் போட்டியானது கூழாவடி டிஸ்கோ விளையாட்டுக்கழகத்திற்கும் கதிரொளி விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் நடைபெற்றது.
இதன்போது விளையாட்டு வீரர்கள்,நடுவர்கள் வண்ணமயமாக அழைத்துவரப்பட்டதுடன் அதிதிகளுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து சபாபதிப்பிள்ளையினால் உதைபந்தா சுற்றுப்போட்டி ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த போட்டியில் கூழாவடி டிஸ்கோ உதைபந்தாட்ட அணி 07கோல்களையும் கதிரொளி 01 கோலினை மட்டுமே பெற்றுக்கொண்டதன் காரணமாக கூழாவடி டிஸ்கோ உதைபந்தாட்ட அணி வெற்றிபெற்றது.