விளையாட்டு மைதானத்தை பெற்று தருமாறு கோரி ஒன்று திரண்ட கிராம மக்கள்


(லியோன்)

மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட கொடுவாமடு கிராம இளைஞர்களுக்கான  விளையாட்டு மைதானத்தை பெற்று தருமாறு கோரி  கிராம மக்கள்  ஒன்று திரண்டு  இன்று கவனஈர்ப்பு பேரணியை மேற்கொண்டனர் .


செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட கொடுவாமடு கிராமத்தை சேர்ந்த  இளைஞர்கள்  கடந்த 1989 ஆண்டு முதல் கொடுவாமடு சந்திக்கு முன்பாக உள்ள அரச காணியில் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி  விளையாடி வருவதாக தெரிவிக்கும் இவர்கள் கடந்த 22,02,2017 திகதி முதல் காத்தான்குடி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தமக்கு சொந்தமான காணி என உறிமை கூறி விளையாட்டு மைதானமாக பயன்படுத்துவதை தடை செய்ய கோரி கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் .

இது தொடர்பாக அரசியல் வாதிகளுக்கும் ,அரச அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்ட போது இது அரசுக்கு சொந்தமான காணி எனவே எவரும் இதற்கு உரிமை கூற முடியாது என தெரிவிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்

இந்நிலையில் கடந்த 22,02,2017 திகதி முதல் கரடியனாறு பொலிஸ் நிலைய  அதிகாரிகளினால்  கிராம இளைஞர்களுக்கு  இந்த காணியில் விளையாடுவதற்கு தடை  செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கின்றனர் .

இது தொடர்பாக  முறைப்பாட்டை பிரதேச செயலாளருக்கு  தெரிவிப்பதற்காக   ஒன்று திரண்ட கொடுவாமடு  கிராம மக்கள்  பேரணியாக  இது விளையாட்டு மைதானமா அல்லது இனக்கலவர மூட்டும் அத்திவாரமா பதில் சொல் பிரதேச செயலாளரே ,  உத்தியோகத்தர்கள் எமது கிராம இளைஞர்களை பயங்கரவாதி ஆக்குகிறார் பொறுப்பதிகாரியுடன் இதனை கேளுங்கள் கூட்டமைப்பே ,  தமிழர்கள் விளையாடுவதற்கு கூட இவ் ஆட்ட்சியில் தடையா பொறுப்பதிகாரியிடம் கேளுங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பே ,  எங்கள் விளையாட்டு விடயத்தல் கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி தலையிடக்கூடாது ,  அரச  உத்தியோகஸ்தரை மதிக்காத பொலிஸ் பொறுப்பதிகாரி எமக்கு தேவை இல்லை,   89ல் இருந்து விளையாடிய விளையாட்டு பூமி எமக்கு தேவை போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்தார் .  

பிரதேச செயலகத்திற்கு உள்  நுழைந்த  கிராம மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பாக  அப்போது கடமையில் இருந்த உதவி பிரதேச செயலாளர் திருமதி என். முகுந்தன் மற்றும்  சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரிகளுக்கு  தெரிவிக்கப்பட்டதுடன் இது தொடர்பாக நடவடிக்கையினை மேற்கொண்டு கிராம இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானத்தை பெற்றுத்தருமாறு கோரி  மகஜரும் கையளிக்கப்பட்டதுள்ளதாக தெரிவித்தனர்