“சுதந்திர மனிதனின் சுதந்திர தினம் “ மாணவர்களுக்கான சிறப்பு பேச்சு , பாடல் போட்டிகள்

(லியோன்)

இலங்கையின் 69 வது சுதந்திர  தினத்தினை  சிறப்பிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான சிறப்பு பேச்சு மற்றும் பாடல் போட்டிகள்  கலாசார அதிகார சபை மற்றும்  கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால்  மட்டக்களப்பில் (10) வெள்ளிக்கிழமை  நடைபெற்றது .


மட்டக்களப்பு  மண்முனை வடக்கு கலாசார அதிகார சபையும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் “சுதந்திர மனிதனின் சுதந்திர தினம் “ எனும் தலைப்பில் பேச்சு மற்றும் பாடல் போட்டிகள்   நிகழ்வுகள்  மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களின்  ஒழுங்கமைப்பில்  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  கே .குணநாதன்  தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில்  நடைபெற்றது .

நடத்தப்பட்ட பேச்சு மற்றும் பாடல் போட்டிகளின் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர் ,

குறித்த  போட்டி நிகழ்வுக்கு நடுவர்களாக முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் எஸ் . எதிர்மன்னசிங்கம் , அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி . எஸ் . கலைவாணி ,திருமதி .வேணுகா ,திருமதி எஸ் .சரண்யா மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் ,மாணவர்கள் ,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் .